M.சார்ளிஸ்


இவர் 1880இல் அம்பலங்கொடை என்னும் ஊரில் பிறந்தார்.  இவர் சிறுவயதில் கலைஞன் ஹென்றிகஸிடம் ஓவியம் பயின்றார். பௌத்த சமய மறுமலர்ச்சிக்கு ஓவியங்களைப் பயன் படுத்திய ஒரே ஒரு கலைஞர் ஆவார். இவர் கொழும்பு ஓவியர் எனவும் பௌத்த விகாரை ஓவியங்களை வரைந்தலர் எனவும் சிறப்பிக்கப்படுகின்றார். மேலத்தேய கிறிஸ்தவ கலாச்சாரம் இலங்கையில் மேலோங்கி இருந்த காலத்தில் பௌத்த கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக பௌத்த விகாரைச்சித்திரங்களை வரைந்த ஓவியராவர்.

                                20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பௌத்தர்களுடைய இல்லங்களின் கத்தோலிக்க சமயப் பாடங்களால் நிறைந்திருந்ததைக் கண்ட இவர் பௌத்த மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக பல பௌத்த நிகழ்வுகளை வரைந்து அவற்றை ஜேர்மனிக்கு அனுப்பி லிதோ முறையில் அச்சுப் பதித்து பௌத்த சமயத்தை பின்பற்றும் மக்களின் இல்லங்களுக்கு வழங்கினார். இவருடைய ஓவியங்கள் பௌத்த விகாரை ஓவியங்கள் எனவும் லிதோ அச்சுச் சித்திரம் எனவும் இரு வகைப்படும். இவர் 36 ஓவியங்கள் அளவில் அச்சிட்டு வெளியிட்டார்.

இவருடைய ஓவியங்கள் காணப்படும் விகாரைகள்
1.கொழும்பு மாளிகாவத்த விகாரை
2. பொத்துப்பிட்டிய புர்வாராம விகாரை
3. இந்துருவ யாதேகம விகாரை
4. கரகம்பிட்டிய விகாரை

பௌத்த லிதோ அச்சுச் சித்திரங்கள்
1. சித்தாத்தர் பிறப்பு
2. தாமரைப் புவில் நடந்நு வருதல்
3. சித்தாத்தரின் திருமணம்
4. லௌகீக வாழ்க்கையை துறந்து செல்லல்
5. கல்விகற்றல்

6. சித்தார்த்தரும் பிரஜாபதி கோதமியும்
7. சீவலி பிக்கு

இவருடைய ஓவியங்களில் மேலைத்தேய பாணி காணப்படுகின்றது.
 சார்லிஸ்  அவருடைய ஓவியங்களில் முப்பரிமாணத்தன்மை, ஒளி நிழல், தூரதரிசனம், பிரகாசமான வர்ணப் பாவனை பல்வேறு அலங்கார வடிவங்கள் காணப்பட்டமை இவருக்குறிய சிறப்பியல்பாகும்.

               

சித்தாத்தர் திருமணம்

இளவரசர் சித்தாத்தரும் தாயும்(லிதோ அச்சுமுறை)

லும்பினி புங்காவில் சித்தாத்தர் பிறப்பு

1 comments:

Post a Comment