கடலாதெனிய விகாரை

  • கடலாதெனிய விகாரை கம்பளைக் காலத்தைச் சேர்ந்த ஒரு கலைப்படைப்பாகும்.
  • கி.பி 1341-1351 காலத்தில் கம்பளையை ஆட்சி செய்த 4ஆம் புவனேகபாகு மன்னன் காலத்தில் தர்மகீர்த்தி தேரோவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சேனாதிலங்கார அமைச்சரின் தலைமையில் சத்தர்மதிலக எனும் கடலானெிய விகாரை நிர்மானிக்கப்பட்டது.
  • கட்டிடக்கலைஞர் - கணேஸ்வராச்சாரியார்
  • இது 3 பகுதிகளைக் கொண்டது 
      1. 1ஆம் மண்டபம்
      2. அர்த்த மண்டபம்
      3. கர்ப்பக்கிரகம்
  • விகாரையில் மேல் தளம் கருங்கல்லால் ஆனது.
  • கூரை தட்டையானது கீழ்த் தளத்தில் நடனக்காரர், மேளக்காரர் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வுருவங்கள் உயிரோட்டமும் அசைவும்காட்டப்பட்டுள்ளது.
  • தென்னிந்திய விஜய நகர இந்து கட்டடக் கலையின் செல்வாக்கு காணப்படுகின்றது.





  • 12 அடி உயரம் கொண்ட அடித்தளத்தில் அமர்ந்த நிலையில் 4 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
  • 8 திசையிலும் 8 யானை உருவம் செதுக்கல் முறையில் வைக்கப்பட்டுள்ளது.
  • 40 அடி உயரமான தூபி நிர்மானிக்கப்பட்டுள்ளது. தூபியை சுற்றி 4 சிறிய சைத்தியம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment