ஸ்ரான்லி அபேசிங்ஹ


ஸ்ரான்லி அபேசிங்ஹ (1914-1992

1.     20ஆம் நூற்றான்டின் நவீன கலை வரலாற்றில் ஆரம்ப காலத்தில் தோன்றிய சிறந்த சித்திரக் கலைஞர்.
2.     இவர் 43 குழுவினரின் நவீனத்துவ வெளிப்பாட்டுக்குச் சமாந்தரமாக அரச நுண்கலைக் கல்லூரியில் நவீன பாணியில் செல்வாக்கைப்பெற்று புதியபோக்கை கட்டியெழுப்பிய முதன்மையான முன்னோடி 
3.     இவரது படைப்புக்களில் மரபுரீதியான கலையின் பாணிசார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத, வெளிப்பாட்டுவாத ஓவியக்கலைப் போக்குகளினதும் வர்ணப் பயன்பாட்டினதும் செல்வாக்கைக் காணமுடிகின்றது
4.     படைப்புக்களின் பின்னணியாக, கனவடிவவாதக் கலையின் பின்னணி வெளியினதுபண்புகளின் செல்வாக்கு பெறப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
5. குறுகிய தடித்த கோடுகளின் பயன்பாடு அவரதுஒவியப்பண்புகளில் காணப்படும் சிறப்பியல்பாகும்.
6.     இவரது கலைப்படைப்புக்கள் சில வருமாறு.
1.     மட்பாண்டக்கூடம்
2.     ஆவண் ஊர்வலம்
3.     தியானம்
4.     பாலகன்-இளைஞன்
5.     லக்ஸ்மியின் பிறப்பு

1.     ஆவண் ஊர்வலம்





  • ஸ்டான்லி அபேசிங்ஹவினது படைப்புகளுள்ஊர்வலம்எனும் ஊவியமும் முக்கிய இடத்தைப் பெறும் ஒரு படைப்பாகும்.
  • கண்டி, ஆவணி ஊர்வலத்தை கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்ட இந்தப் படைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இருட்சாயல் ஒளிப்பான நிறங்கள், எதிர் வர்ணங்கள் ஊடாக சித்திரத்தின் அழகு புதிதொரு விதத்தில் காட்டப்பட்டுள்ளது.
  • இருட்சாயல் வெளிச்சமான வர்ணங்களை வெற்றிகரமாக பயன்படுத்தி இராக்காலத்தைச் சித்திரிப்பதற்கு எடுத்த முயற்சி மேலும் பொருளுள்ளதாக மாற்றியுள்ளது.
  • இராக்காலத்தை சித்தரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள இருள்-ஒளி நிலைமைகளை நிறங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளதோடு, ஊர்வலத்தின் வெவ்வேறு அம்சங்களும் கூறுகளும் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.
  • கோடுகளை கையாள்வதைவிட வர்ணங்களை சிறப்பாக கையாள்வதன் மூலம, உருவங்கள் வெளிப்படத்தப்பட்டுள்ளன. உருவப்பயன்பாட்டின் போது கருப்பொருளின் முக்கிய அம்சமாகிய, தாதுப்பேழையைத் தாங்கிய யானைச் சித்திரத்தின் நடுவில் இடப்பட்டுள்ளது.
  • கனவடிவக் கலையின் பின்னணி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பாணி சார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவாத மற்றும் வெளிப்பாட்டுவாத ஒவியக்கலைப் போக்கின் வர்ணப் பயன்பாட்டின் செல்வாக்கையும் காணலாம்.
மட்பாண்டக்கூடம்




  • இவ் ஓவியம்  ஒரு மட்பாண்டக் கடையையும் ஒரு தம்பதியினரையும் காட்டுகின்றது.
  • இதில் மரபுரீதியான கலையின் பாணிசார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத, வெளிப்பாட்டுவாத ஓவியக்கலைப் போக்குகள், வர்ணப் பயன்பாடு, கனவடிவவாதக் கலையின் பின்னணி வெளிப்பண்புகள் ஆகியன செல்வாக்குச் செலுத்தியுள்ளமைளைக் காணமுடிகின்றது


0 comments:

Post a Comment