ஜோஜ்கீற்



இவர் 1901-08-17 ஆந் திகதி கண்டியில் அம்பிட்டிய என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கற்றார்.   ஜோஜ்கீற் தனது சித்திரக் கலையை வளர்ப்பதற்கு தனது தந்தையான கென்ரிகீற் அவருடைய ஆங்கில இலக்கிய நூல்களை கற்றுக் கொண்டார். இவர் கண்டியிலுள்ள மல்வத்த விகாரையோடு கொண்டிருந்த தொடர்பினால்  பௌத்த விகாரை ஓவியங்கயை வரைவதற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கலாம்.  பத்து வயதில் சிலுவையில் யேசு என்னும் சித்திரத்தை வரைந்தார். 
                                                          மல்வத்தை பீடத்தைச் சேர்ந்த பிக்குவான பின்னவல தீரானந்த தேரரிடம் பௌத்த சமயக்கருத்துக்களையும், இரவீந்திரநாகூரின் நூல்கள் மூலம் இந்து சமயக்கருத்துக்களையும் விளங்கிக்கொண்டார்  சமஸ்கிருதக் காவியமான கீதாகோவிந்தத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்திய ராகம் தொடர்பான அறிவைப் பெற்று அதுசம்மந்தப்பட்ட ஓவியங்களையும் வரைந்தார். 


                                                         இவரின் ஓவியத்தில் கீழைத்தேய மற்றும் மேலைத்தேய கலப்பு காணப்படுகின்றது. இவருடைய ஓவியத்தில்  தடித்த தெளிவான கோடுகளின் தாக்கமும் காணப்படுகின்றது .கிரேக்க பெண் மற்றும்  அஜந்தாவில் உள்ள ஓவியங்களைப் பின்பற்றி இவர் ஓவியங்களை வரைந்துள்ளமையும் அவதானிக்க முடிகின்றது.


                                                         இவருடைய ஓவியங்கள் பிக்காசோ, செசான் போன்ற ஓவியர்களின் ஓவிய மரபுகள் காணப்படுவதை  அவதானிக்க  முடிகின்றது. இவர்வரைந்த ஓவியங்களில் கோதமி விகாரையில் காணப்படும் ஓவியம் சிறப்பு வாய்ந்தது.
1. மகாமாய தேவியின் கனவு
2. மாறனின் யுத்தம்
3. சித்தார்தரின் பிறப்பு
4. புத்தரின் தலைமயிர் வெட்டும் காட்சி
5. புத்தர் பிறந்த வீட்டை விட்டு செல்லும் காட்சி
6. யயோதாரை திருமணம்



                                              இவருடைய ஓவியங்களில் தூரதரிசனம் சிறப்பாகக் காட்டப்படவில்லை  இரேகை, இருண்ட வர்ணம், மென்வர்ணம், தட்டையான வர்ணம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவரது ஓவியங்கள் ஒர் புதிய பாணியை தோற்றிவித்தது.
மார யுத்தம் 









0 comments:

Post a Comment