லியனாடோ மாவின்சி

  • இவர் கி.பி 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தஜகதி இத்தாலியின் புளோரன்ஸ் நகரின் வின்சி எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • வெராச்சியோ என்பவரிடம் ஒவியம் பயின்றார்.
  • இவரது ஓவியங்களுள் சிறப்பானவை
    • மொனாலிசா
    • பாறை மேல் கன்னி
    • இறுதி இராப்போசனம்
  • மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். 
  • இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலிஉருவாக்கங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றன. 
  • பிரான்ஸ்அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படமாக கிபி. 1503மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.
  • மொனாலிசாவின் மென்மையும் புன்னகையும் எங்கிருந்து பார்த்தாலும் பார்வையாளனைப் பார்ப்பது போன்ற பார்வையும் இரசிப்பவர்களை இன்றும் கவருகின்றன.

  • மிலானைச் சேர்ந்த மரியா டெலா கிரசி டொமினிக்கன் துறவிகளின் இல்லச் சுவரில் டெம்பாரா முறையில் (உலர்ந்த சாந்தின் மேல்) இது சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும்.[1] இறுதி இராவுணவை சில கிறித்தவர்கள் இராப்பந்தி அல்லது இராபோஜனம்என்றும் கூறுவதுண்டு.
  • லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (Beatrice d'Este) என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.
  • யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சிபற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். 
  • இயேசுஅந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். 
  • எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது.

  • கன்னி மரியாளும் இருபாலகர்களும் காணப்படுகின்றனர். கன்னி மரியாளுக்கு அருகில் இரு பாலகர்களும் ஒரு தேவதூதனும், மலைக்கு மேல் உள்ள ஒரு காட்சி இதனைப் பிரதிபலிக்கிறது.
  • முக்கோண மாதிரியின்படி அமைக்கப்பட்டுள்ளது.
  • கன்னி மரியாளின் முகத்தில் காருண்யம், பாலகர்களின் மென்மை என்பவற்றை ஒவியர் துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளார்.
  • பின்னணியில் தாவரங்கள், பல வடிவங்களில் உள்ள மலைகள் காட்டப்பட்டுள்ளது. தூரத்தில் காணக் கூடிய வகையில்  புமியையும் சித்தரித்துள்ளார். அதாவது தூரதரிசனம் உபயோகித்துள்ளார். ஒளி நிழல் காட்டி வரைந்துள்ளார்.
  • கன்னிமரியாளினதும் பாலகனினதும் முகத்தில் ஒளி காட்டப்பட்டுள்ளது.
  • இவர் கியுரெஸ்கியுரோ முறையில் வர்ணம் தீட்டியுள்ளார்.
  • இருளான வர்ணங்கள் உபயோகித்துள்ளார் மண்ணிறத்தைப் பல விதத்தில் பயன்படுத்தி உள்ளார்.
  • இது தற்போது லண்டன் நகரின் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

1 comments:

பயன்படும்ஊடகம்

Post a Comment